விஜயகாந்தை சந்தித்த டிடிவி தினகரன்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (12:20 IST)
அமமுக மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.

அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்பதும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தேமுதிகவின் 60 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் போட்டியிடவில்லை என்பதும் விஜயகாந்த் முதல் முறையாக போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்குள்ளாகவே இருக்கும் நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்