துலாம்: சித்திரை மாத ராசி பலன்கள் 2021

Webdunia
கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு (அ.சா) - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன்,  சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

பலன்:
பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள்  குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.
 
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல்  ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குருவின் சஞ்சாரத்தால் தேவையான பண வரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை  காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில்  ஈடுபடுவது  நன்மையை தரும்.
 
குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி  ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.
 
பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு உங்களுக்குக்  கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ்  விருது உங்களைத் தேடி வரும். 
 
அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். உங்களுடைய  விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். 
 
மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.
 
சித்திரை 3, 4 பாதங்கள்: 
இந்த மாதம்  தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான  பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.
 
சுவாதி:
இந்த மாதம்  குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய  முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம்  அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
 
பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை  நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் - 15, 16, 17; மே - 12, 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: மே - 5, 6, 7.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்