கன்னி: சித்திரை மாத ராசி பலன்கள் 2021

Webdunia
கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (அ.சா) - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  சுக்ரன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

பலன்:
திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து  முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். நக்ஷத்ராதிபதியின் சார பலம் பலவித நற்பலன்களை அளிக்கும்.  வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.
 
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக  இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
 
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர்  வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.
 
பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.
 
கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும்.  வரும் வாய்ப்புகள் உங்கள் பெயரை பிரபலப்படுத்தும். 
 
அரசியல்துறையினருக்கு உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாற்று முகாம்களை சேர்ந்தவர்கள் உங்களை நாடி வருவார்கள். 
 
மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம்  தேவை.
 
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம்  பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து  வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.
 
அஸ்தம்:
இந்த மாதம்  மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.
 
சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த மாதம்  துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.
 
பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஏப்ரல் - 14; மே - 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: மே - 3, 4.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்