பொம்பளைய கதற வைக்க ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது: ‘ராங்கி டிரைலர்
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (18:53 IST)
பொம்பளைய கதற வைக்க ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது அதுக்கு மேலயும் இருக்கனும் கீழேயும் இருக்கும் என த்ரிஷா பேசும் வசனத்தை கூடிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ராங்கி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில ஆண்டுகளாக நிலையில் தற்போது தான் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் 30-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது
இந்த ட்ரெய்லரில் த்ரிஷாவின் அதிரடி காட்சிகள் உள்பட பல ஆக்சன் காட்சிகள் இருப்பதாக ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கேயும் எப்போதும் என்ற படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதையை அர் முருகதாஸ் எழுதியுள்ளார் என்பதும் இந்த படத்திற்கு சி சத்யா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது