தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகம் ஆன திரிஷா, கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
இதையடுத்து, ஆறு, தம், ஆதி, கில்லி, சாமி, 96, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, கொடி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் திரிஷா சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.