18 வயசில என் உடம்புல கத்தி படாத இடமே இல்லை.. சுந்தர் சியின் ‘தலைநகரம் 2’ டீசர்

வியாழன், 15 டிசம்பர் 2022 (07:47 IST)
18 வயசில என் உடம்புல கத்தி படாத இடமே இல்லை.. சுந்தர் சியின் ‘தலைநகரம் 2’ டீசர்
சுந்தர் சி நடித்த தலைநகரம் என்ற திரைப்படம் கடந்த 2006ம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது 16 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
முதல் பாகத்தில் இருந்த அதே சுந்தர் சி ஆக்ரோஷத்துடன் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது 
 
முதல் பாகத்தை இயக்கிய துரை இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சுந்தர் சி நடித்த முதல் பாகமான ‘தலைநகரம்’ மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதே போல் இந்த இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்