மறைக்கப்பட்ட மாவீரனின் வரலாற்றை கூறும் சயீரா நரசிம்ம ரெட்டி ட்ரைலர்!

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (18:15 IST)
இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் ட்ரைலர் இணையத்தில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 


 
ராம் சரண் தேஜா தயாரித்துள்ள இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, கிச்சா சுதீப் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.  அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. 
 
உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற மாவீரனின் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படபிடிப்பு சிரஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணை தோட்டமான ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி பகுதியிலுள்ள கோக்கா பேட்டை என்ற இடத்தில் பிரமாண்ட கோட்டை அரங்கு அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. 
 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் தெலுங்கு ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் இப்படத்தின் தமிழ் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்