சோலோவாக களமிறங்கிய தமன்னா! – பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்!

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (20:26 IST)
தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

நயன்தாரா, த்ரிஷா, டாப்ஸி போன்ற நாயகிகள் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி பெண் மைய கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளனர். தற்போது நடிகை தமன்னாவும் ‘பெட்ரோமாக்ஸ்’ என்னும் திகில் படம் மூலம் அந்த பட்டியலில் இணைகிறார்.

ஏற்கனவே தேவி படத்தில் பேயாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் இந்த படத்தில் பேய்களை விரட்டும் சிங்க பெண்ணாக களம் இறங்கியிருக்கிறார். பேய் வீடு ஒன்றில் தன் குடும்பத்தோடு சென்று தங்குகிறார் தமன்னா. தமன்னா குடும்பத்தை காமெடி பேய்கள் துரத்தியடிக்கிறதா? அல்லது காமெடி பேய்களை தமன்னா குடும்பம் துரத்தியடிக்கிறதா? என்பதே படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன்.

ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈகிள் ஐ ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெட்ரோமாக்ஸ் ட்ரைலரை காண…

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்