வட சென்னை 2 வரும் ஆனால்? டிவிஸ்ட் வைத்த வெற்றிமாறன்!

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (15:02 IST)
வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வெப் சீரிஸாக வரலாம் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த படத்தை மூன்று பாகமாக தயாரிக்க தனுஷும் வெற்றுமாறனும் திட்டமிட்டு வருகின்றனர். அதன் பின்னர் இருவரும் இணைந்து உருவாக்கிய  'அசுரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து வெற்றிமாறன் இப்போது வாடிவாசல் எனும் படத்தை எடுக்கும் முனைப்பில் உள்ளார். அதில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வெற்றிமாறன் அளித்த நேர்காணலில் வடசென்னை 2 எப்போது உருவாகும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் வடசென்னை 2ஆம் பாகத்தை வெப் சீரிஸாக எடுக்கலாமா என்ற யோசனையில் இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த படத்தை மட்டும் 2 சீசன்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்