மான் கராத்தே இயக்குனரின் அடுத்த படத்தில் அருண் விஜய் !

திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:38 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.

இப்போது இவர் நடிப்பில் அச்சம் என்பது இல்லையே மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளன.

இந்நிலையில் இப்போது மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். வணங்கான் படத்தை முடித்ததும் இந்த படத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்