சிவகார்த்திகேயனுக்கு நாலு வில்லன்களாம்… அதில் ஒருத்தர்? வெளியான அப்டேட்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:43 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பிரேம்ஜி வில்லனாக நடிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

கடந்த பல வருடங்களாக பிரேம்ஜி காமெடி நடிகராக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் குணசித்திர வேடத்தில் கூட அவர் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 20 என்ற படத்தின் வில்லனாக பிரேம்ஜி நடிக்க இருப்பதாகவும் இருப்பினும் காமெடி கலந்த வில்லன் என்பதால் இந்த படத்தில் அவர் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் அனுதீப் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஆரம்பிக்கும் போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் மட்டுமே உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது நான்கு மொழிகளில் படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதனால் தமிழ் மொழிக்கு மட்டுமே வில்லனாக பிரேம்ஜி நடிக்கிறாராம். மற்ற மொழிகளுக்கு எல்லாம் அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளதாம் படக்குழு.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்