தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக வாரத்த்தின் ஏழு நாட்களும் தொடர்களை ஒளிபரப்ப ஜி தமிழ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதலில் தொலைக்காட்சிகளில் தொடர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப் பட்டன. அதன் பின்னர் சனிக்கிழமையும் தொடர்கள் ஒளிபரப்பட்டு ஞாயிற்றுக் கிழமை மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டது. இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக ஆறு மாதங்களுக்கு மேலாக சீரியல்கள் ஒளிபரப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வாரத்தின் ஏழு நாட்களும் சீரியல்கள் ஒளிபரப்பப்படும் என ஜி தமிழ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இது தற்காலிகமாகவா அல்லது நிரந்தரமாக தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.