வாடகை பாக்கி கேட்ட ஹவுஸ் ஓனருக்கு வக்கீல் நோட்டீஸ்.. ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்..!

Siva
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (16:11 IST)
வாடகை பாக்கி கேட்டு ஹவுஸ் ஓனர் யுவன் சங்கர் ராஜா மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தன் மீது அவதூறு புகார் அளித்த ஹவுஸ் ஓனர் மீது வழக்கு தொடர போவதாகவும் அவர் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதற்காக ரூபாய் 5 கோடி தர வேண்டும் என்றும் கேட்டு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வாடகை இருந்த நிலையில் அந்த வீட்டிற்கு கடந்த இரண்டு வருடங்களாக வாடகை தரவில்லை என்றும் அதுமட்டுமின்றி உருவாக 20 லட்சம் வாடகை தராமல் வீட்டை காலி செய்துவிட்டார் என்றும் ஹவுஸ் ஓனர் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் வாடகை பாக்கி விவகாரத்தில் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஹவுஸ் ஓனருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

20 லட்சம் வாடகை பாக்கி வைத்து விட்டு வீட்டை காலி செய்ய முயற்சிப்பதாக வீட்டின் உரிமையாளர் கூறிய நிலையில் யுவன் சங்கர் ராஜா மீது ஹவுஸ் ஓனர் புகார் அளித்திருந்தார். இது போன்ற அவதூறு கருத்துக்கள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக யுவன் சங்கர் தரப்பின் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்