ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ இசையமைப்பாளர் குறித்த தகவல்

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (18:54 IST)
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 4வது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் தற்போது அவர் ’ஜனகணமன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ’என்றென்றும் புன்னகை’ இயக்குனர் அகமது இயக்கி வருகிறார்.


ஜெயம் ரவியின் 26 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் டாப்ஸி, ஈரான் நடிகை  ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் ’செக்கச் சிவந்த வானம்’ நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்

 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்திற்கு இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
 
அதிரடி ஆக்சன் காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் ஜெயம் ரவி ராணுவ வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக  ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் கிளன் போஸ்வெல் என்பவர் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்