அஜித்தால் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (22:25 IST)
அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த எட்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பெண்கள் கூட்டம் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக வருவதால் இந்த படத்தின் வசூல் அபாரமாக இருப்பதாகவும் படத்திற்கு கிடைத்த பேராதரவு காரணமாக திரையரங்குகள் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது 
 
இந்த நிலையில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தில் ஜெயம் ரவியின் 'கோமாளி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே புக் ஆகியிருந்த திரையரங்குகளில் தற்போது 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த படத்தை தூக்க திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்து வருவதாகத் தெரிகிறது. எனவே கோமாளி படத்திற்கான பெரும்பாலான திரையரங்குகள் மிஸ் ஆகும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் படகுழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
ஏற்கனவே திட்டமிட்ட திரை அரங்கங்களில் கோமாளி திரைப்படம் வெளியானால் மட்டுமே இந்த படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கும். ஆனால் திரையரங்குகளின் எண்ணிக்கை திடீரென குறைந்தால் இந்த படத்தின் வசூலுக்கு சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென திருச்சி விநியோகிஸ்தர்கள் 'கோமாளி' திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்