மீண்டும் இணையும் பியார் பிரேமா காதல் கூட்டணி – வித்தியாசமான தலைப்பை அறிவித்த யுவன்!

திங்கள், 7 டிசம்பர் 2020 (11:15 IST)
யுவன் தயாரிப்பில் உருவான ப்யார் பிரேமா காதல் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த படத்துக்கு ஹே (HEY)எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்க்ரின் சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்