புத்தாண்டில் ‘மாஸ்டர்’ டிரைலர், டிரைலரில் ஒரு டுவிட்ஸ்: விஜய் ரசிகர்கள் குஷி!

ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (11:31 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தயாராக இருப்பதாகவும் இந்த டிரைலர் வரும் ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த ட்ரெய்லரில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ட்விஸ்ட் ஆக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜனவரி 1ஆம் தேதியை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் இந்த தகவல் காரணமாக விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று யூடியூப்பில் சாதனை செய்த நிலையில் இந்த படத்தின் டிரைலரும் சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்