என்னாது மாதவிடாயா..? எச். ராஜாவை விமர்சித்த பிரசாந்த்!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (09:59 IST)
வளர்ந்து வரும் இந்த டெக்னாலெஜி உலகத்தில் பலர்பேர் குறுகிய கால இடைவெளியில் பெரிய சினிமா பிரபலங்களுக்கு ஈடாக பேமஸ் ஆகி வருகின்றனர். அதில் முக்கியமான நபர் தான் யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி. இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வெளிவரும் புதுப்படங்கள் குறித்த விமர்சனத்தை தனது தனித்துவமான ஸ்டைலில் கொடுத்து பிரபலமாவிட்டார். 
இப்படி சினிமா மட்டுமின்றி அரசியல்,  பொது பிரச்சனை உள்ளிட்டவற்றை குறித்து ட்விட் செய்து சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார். ஆளுங்கட்சி , மற்றும் அரசியல்வாதிகளை குறித்து சர்ச்சை பதிவிட்டு வரும் இவர் தற்போது பா ஜ க கட்சியின் செயலாளர் எச் ராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். 
அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குரிய நபராக பார்க்கப்படும் பா ஜ க கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்றாம் நாள் என்று குறிப்பிட்டு ஒரு ட்விட் செய்திருந்தார். இதனை கண்ட பிரசாந்த் "மாதவிடாயா" என்று கேட்டு மிகவும் மோசமாக கமெண்ட் அடித்துள்ளார். பிரசாந்தின் இந்த பதிவு இணையதளவாசிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது பிரசாந்தின் போலி கணக்கில் இருந்து போடப்பட்ட கமெண்ட் என்பது பின்னர் தான் தெரிந்தது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்