டோக்கன் நம்பர் 101: பிரசாந்த் கிஷோரை சந்தித்த ரஜினி? நக்கலடித்த ராமதாஸ்!

புதன், 25 செப்டம்பர் 2019 (13:43 IST)
நடிகர் ரஜினிகாந்த், அரசியல் சானக்கியர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை சந்தித்தாக வெளியான செய்திகளுக்கு நக்கலாக மறைமுகமாக டிவிட் போட்டுள்ளார் ராமதாஸ். 
 
நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தனது அரசியல் எண்ட்ரி குறித்து கேள்வி எழுப்பியவர்களின் வாயை, அரசியலுக்கு வரப்போவது உறுதி. எல்லாம் தயார் நிலையில் உள்ளது. அம்பு எய்ய வேண்டியது மட்டுமே பாக்கி என கூறி அடைத்துவிட்டார். 
 
இந்நிலையில் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராக திகழ்ந்து வெற்றிபெற செய்த பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து ரஜினி விரைவில் கட்சியை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது. 
ஆனால், பாமக தலைவர் ராமாதாச் தனது டிவிட்டர் பக்கத்தில்,  நேற்றைய உரையாடலின் தொடர்ச்சி.... ‘‘அண்ணே....பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?’’; ‘‘இல்லப்பா அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன் என பதிவிட்டிருந்தார். 
 
இந்த டிவிட் ரஜினியை மறைமுகமாக தாக்கும் வகையில் இருப்பதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர். அதோடு அந்த 100 பேர் லிஸ்டுல உங்க கூட்டணி கட்சியான அதிமுகவும் இருக்கு எனவும் நக்கலடித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்