ரஜினி படத்துக்கு எடிட்டர் யார்னு தெரியுமா?

Webdunia
வியாழன், 25 மே 2017 (10:37 IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் எடிட்டர் யார் என்ற விவரம் தெரிந்துள்ளது.

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து ரஜினியும், பா.இரஞ்சித்தும் இணைந்துள்ள படத்துக்கு ‘காலா’ என தலைப்பு  வைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய முந்தைய படங்களில் நடித்த நடிகர்களை இந்தப் படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பா.இரஞ்சித், தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துகிறார்.
 
அதன்படி, ஜி.முரளி ஒளிப்பதிவாளராகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும் தொடர்கின்றனர். ஆனால்,  பா.இரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றிய பிரவீன் கே.எல்., நேரம் இல்லாததால் இந்தப் படத்தில் இருந்து விலகினார். அவருக்குப் பதில், தேசிய விருது பெற்ற எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்தில் பணியாற்ற  இருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்