அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நடிக்கின்றாரா யோகிபாபு? அவரே அளித்த பதில்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (13:13 IST)
அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் டைட்டில் ‘வலிமை’ என்பதை தவிர படக்குழுவினர் அதிகாரபூர்வமாக இன்னும் எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் நடிக்கும் நாயகி ஹூமோகுரேஷி, வில்லன் கார்த்திகேயன் உள்பட பல தகவல்கள் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்தது தான் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யார் யார்? தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மே 1ஆம் தேதி வெளியாக இருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் யோகி பாபு நடித்து வருவதாக ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அதனை யோகி பாபு உறுதி செய்துள்ளார். ட்விட்டரில் ரசிகர் ஒருவர் வலிமை படத்தில் நடிக்கின்றீர்களா என்று கேட்டபோது அதற்கு ஆம் என்று பதிலளித்து உள்ளார் யோகிபாபு. இதனை அடுத்து வரும் ‘வலிமை’ படத்தில் யோகி பாபு நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்திலும் நடிப்பதை சமீபத்தில் யோகிபாபு உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்