விஜய்-ன்' பீஸ்ட்' படம் குறித்த யோகிபாபு முக்கிய தகவல்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (23:19 IST)
விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கவுள்ளது குறித்த நடிகர் யோகிபாபு ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதை முன்னிட்டு இப்போது படத்தில் மூன்று வில்லன்கள் நடிப்பதாகவும், அதில் ஒருவராக மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் செல்வராகவன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வில்லன் கதாபாத்திரத்தில் சமீபத்தைய வைரல் ஸ்டார் டான்ஸிங் ரோஸ் சபீர் நடிக்க உள்ளாராம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் எழுதிப் பாடியுள்ளதாகத் தகவல் வெளியானது.

அதேபோல் நடிகர் யோகிபாபு இப்படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் அவரிடம் நீங்கள் எப்போது போஸ்ட் படத்தில் நடிக்கவுள்ளீர்கள் என்று கேள்வி கேட்டார்.

இதற்குப் பதிலளித்த நடிகர் யோகிபாபு, நாளை எனப் பதிலளித்தார். இதனால் விஜய் ரசிகர்களும்யோகிபாபு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், பிகில், சர்கார் உள்ளிட்ட படங்களில் விஜய்., யோகிபாபு இருவரிடையேயான காட்சிகள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்