'எஸ்.கே 16 படத்தில் இணைந்த இரண்டு பிரபல நடிகர்கள்!

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (11:11 IST)
'எஸ்.கே.16 என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயனின் 16வது படம் குறித்த மூன்று முக்கிய அப்டேட்டுக்களை நேற்று பார்த்தோம். ஒன்று இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்பதும், இரண்டாவது இந்த படத்தின் நாயகி அனு இமானுவேல் என்பதும், மூன்றாவது இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதும் ஆகும்
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகிபாபுவும் சூரியும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. யோகிபாபு, சூரி இருவரில் ஒருவர் இருந்தாலே அந்த படத்தில் காமெடி களைகட்டும். இந்த நிலையில் இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகம் செய்த பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும், அவை ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்