டைம் டிராவல் கதையில் யோகி பாபு… மீண்டும் கடவுள் வேடத்தில்!

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:46 IST)
யோகி பாபு நடிப்பில் அடுத்து உருவாகும் படத்துக்கு பெரியாண்டவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் இயக்குனர் ஆர் கண்னன் இயக்கும் ‘பெரியாண்டவர்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு டைம் ட்ராவல் கதை என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு சிவன் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்