ஆனால் இந்த படமும் கைவிடப்பட்டு விட்டதாகவும், அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தின் பட்ஜெட் அதிகமானதுதான் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின. பட்ஜெட் காரணமாக இந்த படத்தைத் தொடங்க தாணு விரும்பவில்லை என்று சொல்லப்படும் நிலையில் தானே இந்த படத்தைத் தயாரிக்கும் முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் கூடிய விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.