நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார். இவரது மனைவி ஜோதிகாவும் தற்போது நடிப்பில் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மகத்துடன் காதல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய யாஷியா சூர்யாவை பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமூக வலைதளத்தள்த்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யாஷிகா, உங்களுக்கு சூர்யாவை பிடிக்குமா? என கேட்டதற்கு, சூர்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை திருமணம் செய்துக்கொள்ள ஆசை என பதிலளித்தார்.
இதனால், சூர்யா ரசிகர்கள் பலர் கொந்தளித்துள்ளனர். சூர்யாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் விஷயம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?, அவர் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சூர்யா - ஜோதிகா சிறந்த தம்பதிகள் இப்படி பேசாதீர்கல் என பலர் யாஷிகாவை திட்டி வருகின்றனர்.
சிலரோ மிகவும் கேலியாக என்னது சூர்யாவுக்கு இரண்டாவது திருமணமா? வாய்ப்பே இல்லை. உங்கள் ஆசை நிறைவேராது எனவும் தெரிவித்து வருகின்றனர்.