யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் நேற்று யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அதில் யாஷ் கே ஜி எஃப் கெட்டப்பிலேயே பார் ஒன்றுக்குள் நடந்து செல்வது போலவும், பெண்களின் கவர்ச்சி நடனம் இடம்பெறுவது போலவும் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.