ரைட்டர் படத்துக்கு ஓடிடியில் இவ்ளோ டிமாண்டா?

திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:13 IST)
பா ரஞ்சித் தயாரிப்பில் கடந்த ஆண்டு உருவான ரைட்டர் படத்துக்கு ஓடிடியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரைட்டர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஆஹா பெற்றுள்ளது. தமிழில் அவர்கள் கால்பதிக்க உள்ள நிலையில் முதல் திரைப்படமாக ரைட்டரைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது.  இந்த படத்தை ஆஹா நிறுவனம் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்க்கு ஆஹா நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது அந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்