ரைட்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:14 IST)
கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பரவலாக வரவேற்பைப் பெற்ற ரைட்டர் திரைப்படத்தை ஆஹா ஓடிடி நிறுவனம் வாங்கி இருந்தது.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரைட்டர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஆஹா பெற்றுள்ளது. தமிழில் அவர்கள் கால்பதிக்க உள்ள நிலையில் முதல் திரைப்படமாக ரைட்டரைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்