அட்டகாசமான ஆக்‌ஷன்; கிறிஸ்துமஸ்க்கு செம ட்ரீட்! – எப்படி இருக்கு வொண்டர் வுமன் 1984?

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (12:00 IST)
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான வொண்டர் வுமன் 1984 ஓடிடி மற்றும் திரையரங்கில் ஒரே நேரத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டிசி காமிக்ஸ் கதாப்பாத்திரமான வொண்டர் வுமனை வைத்து வெளியாகியுள்ள திரைப்படம் வொண்டர் வுமர் 1984. டிசி பட வரிசையில் ஏற்கனவே வெளியான வொண்டர் வுமன் படத்தின் இரண்டாம் பாகமான இதில் வொண்டர் வுமனாக கேல் கெடாட்டே நடித்துள்ளார். முந்தைய பாகத்தை இயக்கிட பேட்டி ஜென்கின்ஸே இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

இரண்டாம் உலக போர் முடிந்த பின்பு 1984ம் ஆண்டு காலக்கட்டத்தில் மானுடவியல் ஆராய்ச்சியாளர் டயானாவாக வெளி உலகிற்கு காட்டி கொண்டு வொண்டர் வுமனாக சின்ன சின்ன குற்றங்களையும் தடுத்து வருகிறார் டயானா. தனிமையில் இருக்கும் டயானாவுக்கு பார்பரா என்ற பெண்ணின் நட்பு கிடைக்கிறது. இந்நிலையில் பழங்காலத்தை சேர்ந்த அதிசய கல் ஒன்று டயானாவுக்கு கிடைக்கிறது. விருப்பங்களை நிறைவேற்றும் அந்த கல்லை கொண்டு தன் இறந்த காதலன் ஸ்டீவை மீண்டும் கொண்டு வருகிறாள் டயானா. பார்பரா தனக்கு டயானா போல சக்தி வேண்டும் என விரும்பி அதிசய கல்லிடமிருந்து வரம் பெறுகிறாள்.

பின்னர் இந்த ரகசியம் தெரிந்த மேக்ஸ்வெல் லார்ட் கல்லை எடுத்து சென்று தனக்கு விருப்பமானவற்றை செய்ய தொடங்க டயானாவும், பார்பராவும் மேக்ஸ்வெல்லை தடுக்க முயல்கிறார்கள். உலகத்திற்கு ஏற்பட போகும் ஆபத்தை தடுக்க அந்த கல்லை அழிக்க வேண்டும், அப்படி அழித்தால் அந்த கல்லால் கிடைத்த வரங்கள் இல்லாமல் போகும். இதனால் பார்பரா டயானாவிற்கு எதிராக மேக்ஸ்வெல்லோடு இணைந்து விடுகிறாள். இந்நிலையில் மேக்ஸ்வெல் திட்டமிடும் மிகப்பெரும் அழிவிலிருந்து உலகத்தை டயானா எப்படி காப்பாற்றினாள் என்பது சுவாரஸ்யமான ஆக்‌ஷன் கதையாக சொல்லப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் சண்டை காட்சிகள் அதகளம் கிளப்பினாலும், படத்தில் பார்பரா டயானா இடையே வரும் நீளமான வசனங்கள் கதையோட்டத்தில் சோர்வை தருகின்றன. முதல் பாதியில் மெல்லிதாக ஏற்படும் சோர்வை அதிரடியான இரண்டாம் பாதி உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. எல்லாத்தையும் தாண்டி டயானாவாக நடித்துள்ள கேல் கெடாட்டுகாகவே படத்தை பார்க்கலாம். இந்த கிறிஸ்துமஸ்கு ஒரு அதிரடி ஆக்‌ஷன் விருந்தாக வொண்டர் வுமன் 1984 அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்