விஜய் சும்மா நடந்து வந்தாலே மாஸ் தான். சொல்வது விஜய்சேதுபதி தங்கை

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (05:36 IST)
இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலத்திலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அவருக்கு திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் 'றெக்க' படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி விஜய்யின் தீவிர ரசிகையாம்



 


ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி ஒன்றில் விஜய் குறித்து கூறியபோது, 'எனக்கு பிடித்த ஹீரோ விஜய் தான். அவர் சாதாரணமாக நடந்து வந்தாலே ஒரு மாஸாக இருக்கும். அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். அவருடன் கண்டிப்பாக டூயட் பாட வேண்டும் என்பது எனது கனவு. அதேபோல், அஜித், சூர்யாவுடன் டூயட் பாடுவதும் எனது சினிமா கனவு' என்று கூறியுள்ளார்

மேலும் விஜய்சேதுபதிக்கு மட்டுமின்றி அவருடைய மனைவிக்கும் தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், தனக்கு நடிப்பு உள்பட பல விஷயங்களை கற்று கொடுத்த விஜய்சேதுபதிக்கு விரைவில் ஜோடியாக நடிப்பேன்' என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்