முருகதாஸோடு இணைகிறாரா விஷால்? கோலிவுட்டின் ஹாட் டாக்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (11:13 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக விஷாலை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற இப்போது நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில் முருகதாஸ் விஜய்க்காக அவர் உருவாக்கிய கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இரு தரப்பும் மறுத்தது.

இந்நிலையில் இப்போது முருகதாஸ் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஒரு சிலரோ முருகதாஸ் விஷாலை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாகவும் அந்த செய்திதான் இப்படி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்