உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையம் முன்பு அவரது ரசிகர்கள் பலர் காத்திருந்ததாக கூறப்படுகிறது
ஆனால் இன்று ரஜினிகாந்த் சென்னை வரவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. நேற்று இரவு அமெரிக்காவில் இருந்து கிளம்பி இன்று அதிகாலை சென்னை வருவதாக ரஜினிகாந்த் திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து ரஜினிகாந்தின் நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த தகவலின் படி இன்று மாலை அமெரிக்காவிலிருந்து ரஜினிகாந்த் கிளம்புகிறார் என்றும் நாளை அதிகாலை சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒருநாள் தாமதத்திற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இருப்பினும் நாளை அவர் கண்டிப்பாக சென்னை வந்து விடுவார் என்றே கூறப்படுகிறது
ரஜினிகாந்த் சென்னை திரும்பியவுடன் அண்ணாதுரை படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவர் என்றும் அடுத்த படத்தை குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது