ஓம் நமசிவாயா: ரஜினியை அடுத்து தனுஷூம் பிரதமருக்கு வாழ்த்து!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:18 IST)
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு பாராட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் கடினமான மனிதரான பிரதமர் மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார்
 
இந்த நிலையில் ரஜினியை அடுத்து அவரது மருமகனும் பிரபல நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய தனுஷ், அதில் ஓம் நமச்சிவாயா என்று பதிவு செய்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்