மாவீரன் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் பிரச்சனையா? முதல் முறையாக பேசிய சிவகார்த்திகேயன்!

செவ்வாய், 28 மார்ச் 2023 (14:40 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

திட்டமிட்டதை அதிக நாட்கள் ஷூட் செய்யப்பட்டதற்கு இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் காரணம் என சொல்லப்பட்டது. இதுபற்றி இப்போது சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார். அதன்படி “எங்களுக்குள் சண்டையா… அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை. ஏன் அப்படி ஒரு செய்தி பரவியது என்றே தெரியவில்லை. நாங்கள் சிறப்பாக ஷூட்டிங்கை முடித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்