பிசாசு 2 வுக்குக் கார்த்திக் ராஜாவை தேர்வு செய்தது ஏன்? வெளியான ரகசியம்!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:04 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிஷ்கின் படங்களில் எப்போதும் இசைக்கு முக்கியத்துவம்  இருக்கும். அதிலும் குறிப்பாக பின்னணி இசை மிகவும் உணர்வுப் பூர்வமாக இருக்கும். அது இளையராஜாவாக இருந்தாலும் சரி, அரோல் கொரோலி மற்றும் கே போன்றவர்களாக இருந்தாலும் சரி… அவர்களிடம் இருந்து தனித்துவமான இசையை வாங்கிவிடுவார் மிஷ்கின்.

இந்நிலையில் அவரின் பிசாசு 2 படத்துக்கு அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இல்லாமல், அவரின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு இளையராஜாதான் காரணம் என சொல்லப்படுகிறது. தனது மகன் எல்லா திறமைகளையும் பெற்றிருந்தாலும், இன்னும் நல்ல பிரேக் கிடைக்கவில்லை என நினைத்த அவர், மிஷ்கின் படத்தில் பணியாற்றினால் அவருக்கு அது திருப்புமுனையாக அமையலாம என நம்பி இந்த படத்தின் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்