மிஷ்கின் "பிசாசு 2" படத்தில் இணைந்த ஆண்ட்ரியா!

சனி, 19 செப்டம்பர் 2020 (08:48 IST)
தமிழ் சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் அஞ்சாதே, முகமூடி, நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ, சவரகத்தி என பல வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கி அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. பின்னர் இந்த விகாரம் முற்றியதை அடுத்து மிஸ்கின் இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்.

இதையடுத்து விஷாலின் மூக்கை உடைக்கும் வகையில் துப்பறிவாளன் படம் வெளியீட்டிற்கு முன் ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கவேண்டும் என முடிவெடுத்த மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தை கையில் எடுத்துள்ளார். 2014ம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் சூப்பர்  ஹிட் அடித்தது. தற்ப்போது பிசாசு இரண்டாம் பக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்