தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து, இவர் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை அடுத்து அவர் விஜய் 67 படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில், இவர் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த இரும்புக்கை மாயாவி என்ற படத்தை கைவிட்டதாக அறிவித்துள்ளார்.
இது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில். இப்படம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். அதில், இரும்புக் கை மாயாவி படத்தின் ஆரம்பக் கட்ட பணியில் இருந்த போது, இப்படத்தை இயக்குவதற்காக தைரியம் எனக்கு இல்லாதது போன்று உணர்ந்தேன். அதனால், இப்படத்தின் தயாரிப்பாளரிடம், இப்போதைக்கு இப்படத்தை என்னால் இயக்க முடியுமா எனத் தெரியவில்லை; இன்னும் சில படங்கள் இயகிவிட்டு வந்து இப்படத்தை ஆரம்பிக்கிறேன் எனக் கூறியதாக தெரிவித்துள்ளர்.
எனவே சூர்யா நடிக்கும் இப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.