சில ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத்தில் ஒரு இளம் பெண் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இயக்குனர் ராம்கோபால் வர்மா,திஷா என் கவுண்டர் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார்.
இப்படத்திற்கு, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ. 56 லட்சம் கடனாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்பணத்தைப் படம் ரிலீஸாகும்போது,திருப்பிக் கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், சொன்னடி ராம்குமார் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் பாபு, மியாபுர் காவல் நிலையத்தில் ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.