அடுத்த ஆதி குணசேகரன் யார் ? ‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வம்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (17:42 IST)
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஜி மாரிமுத்து இன்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு எதிர்நீச்சல் சீரியல்  குழுவினர்களை மட்டும் இன்றி ஒட்டுமொத்த சின்னத்திரை உலகம் மற்றும் பெரிய திரை உலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில்  எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜி மாரிமுத்து அளவுக்கு அந்த கேரக்டரை சிறப்பாக கொண்டு செல்லக்கூடிய நடிகர் இருக்கின்றாரா என்ற கேள்வியும் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை சாலிகிராம் ஜி மாரிமுத்து வீட்டிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் அவர்களிடம் செய்தியாளர்கள் ’அடுத்த ஆதி குணசேகரன் யார்? என்ற கேள்வி எழுப்பினர். 
 
அப்போது மாரிமுத்து அவர்களின் மறைவால் மிகுந்த துயரத்தில் நாங்கள் இருக்கிறோம், அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பதை முடிவு செய்யும் தருணம் இது அல்ல என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்