கூழாங்கல் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர்ப் ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றது.
இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படங்களின் பட்டியலில் இருந்து இப்போது கூழாங்கல் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்ததற்காக விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆனால் உண்மையில் அவர்கள் இந்த படத்தைத் தயாரிக்கவில்லை. ஆமாம் படத்தின் இயக்குனர் வினோத் ராஜும் அவரது நண்பர்களும் இணைந்து தயாரித்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் செலவை ஏற்றது. பின்னர் படத்தின் தரம் காரணமாக தாங்களே உலகம் முழுவதும் விநியோகம் செய்கிறோம் என்று வாங்கியுள்ளனர்.