விஜய்யின் மூன்றாவது லுக் எப்போது ரிலீஸ்?

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (12:49 IST)
‘மெர்சல்’ படத்தில் 3 வேடங்களில் நடித்திருக்கும் விஜய்யின் மூன்றாவது லுக் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. மூன்று வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார் விஜய். கடந்த மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, 21ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இரண்டு போஸ்டர்களில், விஜய்யின் இரண்டு லுக்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், மொத்தம் மூன்று வேடங்கள் அல்லவா?

எனவே, இன்னொரு லுக் என்னவாக இருக்கும் என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். அந்த லுக், விரைவில் வெளியிடப்படும் என படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
அடுத்த கட்டுரையில்