கருத்து தெரிவிக்கவும் ரிஷாவின் கவர்ச்சி தேவை: இயக்குனரின் சர்ச்சை கருத்து!!

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (12:41 IST)
250 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஜெயந்த் தற்போது சினிமா இயக்குனராக உருவெடுத்துள்ளார்.


 
 
‘முந்தல்’ என்னும் படத்தை தற்போது இயக்கிவருகிறார். புற்றுநோய் தீர்க்கும் அபூர்வ மருந்தை தேடி செல்லும் பயண கதையான இது கடல், விமானம், ரயில் என அனைத்திலும் பயணிக்கிறது என இயக்குனர் கூறியுள்ளார். 
 
புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் நிழல்கள் ரவி, ராஜேந்திரன், போண்டா மணி, வெங்கல்ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 
 
இப்படத்தில் ரிஷா நடிப்பில் ஒரு கவர்ச்சி பாடல் இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதைக்கு கவர்ச்சி பாடல் தேவையா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து சொல்ல வேண்டும் என்றாலும் இந்த காலத்தில் கவர்ச்சி தேவை என தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்