சிவகார்த்திகேயனின் வீடியோ பாட்டு இன்று ரிலீஸ்

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (10:13 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் இருந்து இன்று ஒரு வீடியோ பாட்டு ரிலீஸாக இருக்கிறது.
மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரிலீஸான படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், பஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். சினேகா, ரோகிணி, பிரகாஷ் ராஜ், சார்லி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 
24ஏஎம் ஸ்டுடியோ சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், ‘எழு வேலைக்காரா’ பாடலின் வீடியோ, இன்று இரவு 9 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்