என்னது 'விஜய் 61' படத்தில் மந்திரவாதி கதாபாத்திரத்தில் விஜய்யா?

Webdunia
புதன், 17 மே 2017 (10:16 IST)
அட்லீ இயக்கம் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘விஜய் 61’ படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மூன்று கதாபாத்திரங்களில் ஒன்று பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மந்திரவாதி  ஆகிய மூன்று வேடங்களில் விஜய் நடித்து வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
 
இதில் மந்திரவாதி கதாபத்திரத்தில் முழுக்க நகைச்சுவையுடனும், குழந்தைகளை கவரும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியான முறுக்கு மீசை வைத்த விஜய் பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் உள்ள  கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார்.
 
இந்த நிலையில் விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளான மே 22-ஆம் தேதி வெளியாக உள்ளதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்