ரஜினிக்கு நேரடியாக வாழ்த்து சொல்லாத பிரபல நடிகர் …என்ன காரணம்?

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (15:36 IST)
இன்று ரஜினிகாந்த் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் பல்வேறு பிரமுகர்கள், ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில்அனைவரும் கொண்டாட இன்றைய தினத்தில் பிறந்தவருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி நீண்ட வருடங்களுக்குப் பின் தனது அரசியல் குறித்து உறுதியான முடிவு எடுத்துள்ளார். அவரது ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள ரஜினிக்கு ரா.பார்த்திபன் நேரடியாக வாழ்த்துகள் கூறாமல், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும்-அனைவரும் கொண்டாட இன்றைய தினத்தில் பிறந்தவருக்கும் வாழ்த்துகள் எனப் பொதுவாகப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே,  7 பேரின் விடுதலை குறித்து ரஜினி செய்தியாளர்களின் கேள்விக்கு எந்த ஏழுபேர் எனக் கேட்டபோது, தொடர்ச்சியான எண்களைப் பதிவிட்டு தனக்கே உரிய விதத்தில் 7 என்ற எண்ணை விடுபட்டு ஒரு டுவிட் பதிட்டிருந்தார். அதேசமயம் தக்க நேரத்தில் தான் அரசியக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ள நிலையில், ரஜினியின் அரசியல் வருகை குறித்து நடிகர் பார்த்திபனின் கருத்தை அறிய ரசிகர்கள் முயற்சிக்கிறார்.

இந்நிலையில், இன்று ரஜினியுடன், இயக்குநர் சேரன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கும் பிறந்தநாள் என்பதால் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக வாழ்த்துகள் கூறாமல் அவர் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கும்படி தனது டுவிட்டைப் பதிவிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.



தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்