கடும் குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன? கவினுக்கு நெருக்கமானவர் பேட்டி

வியாழன், 5 செப்டம்பர் 2019 (21:51 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கவின் தாயார் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. தாயார் உள்பட மூவர் சிறைத்தண்டனை பெற்ற விபரம் இன்னும் கவினுக்கு தெரியாது. சிறப்பு விருந்தினர்களாக சென்ற மூவரும் கவினிடம் இதுகுறித்து பேசவில்லை. ஒருவேளை இதுகுறித்து கவினிடம் பேசக்கூடாது என்று பிக்பாஸ் நிபந்தனை விதித்திருக்கலாம் என கருதப்படுகிறது
 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருபவரும் கோலிவுட் திரையுலகின் தயாரிப்பாளருமான ரவிந்தர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். கவினின் குடும்பத்திற்கு நெருக்கமான இவர் தற்போது கவின் தாயார் உள்பட மூவருக்கும் ஜாமீன் எடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை அப்பீல் செய்வது உள்பட மற்ற பணிகளை சீனியர் வழக்கறிஞர்கள் செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் அதாவது கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு முன்பு கவின் குடும்பத்தினர் குறித்த நல்ல செய்தி கிடைக்கும் என்று கூறினார்.
 
 
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் கருத்து தெரிவித்தபோது, ‘வனிதா உள்பட ஒருசிலர் கவினை நிச்சயம் கார்னர் செய்வார்கள் என்றும், ஆனால் கவின், லாஸ்லியா துணையுடன் எல்லா சவால்களையும் சமாளித்து ஃபைனல் வரை கண்டிப்பாக வருவார் என்றும் கூறினார்.
 
 
கவின் குடும்பத்தினர் குறித்து தவறாக பேச வேண்டாம் என சாக்சி தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘சாக்சிக்கு எங்கே ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்று எதிர்க்கேள்வியை கேட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்