அவங்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம் - வனிதாவை ரவுண்டு கட்டும் கவின்லியா !

புதன், 4 செப்டம்பர் 2019 (12:39 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்கள் தற்போது இரண்டு பிரிவினராக பிரிந்து அடிக்கடி வாக்குத்தத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு வருகின்றனர். இதில் கக்கூஸ்லியா கேங் என்று கூறி கவின் மற்றும்  லொஸ்லியாவை மோசமாக கிண்டலடித்து வனிதாவுக்கு ஆதரவுகளை தெரிவித்தும் வருகின்றனர். 


 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் லொஸ்லியாவுக்கும் வனிதாவுக்கு இடையில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அதில் " செய்யுறதெல்லாம் செய்துவிட்டு கடைசியில் சாரி கேட்பதால் அவரது கேரக்டர் ஒண்ணும் மாற போவதில்லை என்று லொஸ்லியா தனது தனிப்பட்ட கருத்தை கூற, உடனே ஷெரின் குறுக்கிட்டு சாரி கேட்குறது பிரச்சனை இல்லை ஆனால் உன்னோட Attitude என்னை ரொம்ப Hurt பண்ணுச்சு என்று கூறுகிறார். அதற்கு வனிதா உன்னால் தான் இந்த டீமில் மரியாதையை இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். 
 
பின்னர் நடந்ததை பற்றி கவினிடம் கூறுகிறார் லொஸ்லியா. அதற்கு கவின், "உலகத்துலேயே அவங்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம்" என்று கூறி லொஸ்லியாவுக்கு ஆதரவாக நிற்கிறார்.  இதனை கண்ட நெட்டிசன்ஸ்..." லொஸ்லியாவுக்கு  முன்னாடி நின்னு பேசத்தெரியாது போல அடிக்கடி அடுத்தவங்களை இப்படி  திட்டிட்டு அவங்க பதிலை  எதிர்பாக்காம எஸ்கேப் ஆகி ஓடுது என்று கூறி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்