பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று சமீபத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு வதந்தி இணைய தளங்களில் பரவியது. பின்னர் அது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், லாஸ்லியாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் அவரது நண்பர்கள் உறுதி செய்தனர்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் லாஸ்லியாவுக்கு இலங்கையில் ஒரு காதலர் இருப்பதாகவும், அந்த காதலர் பெயர் தர்ஷன் என்றும், ஆனால் அந்த தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் தர்ஷன் இல்லை என்றும் இருவரும் வெவ்வேறு நபர்கள் என்றும் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு ஏராளமான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. லாஸ்லியாவின் நண்பர்கள் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவருக்கு யாரும் காதலர்கள் இல்லை என்றும் ஏற்கனவே பலமுறை விளக்கிய போதிலும் லாஸ்லியா மீது தேவையில்லாமல் வதந்தியை பரப்பி வருவது கண்டனத்திற்குரியது என்றும், இதற்கெல்லாம் லாஸ்லியா வெளியே வந்தவுடன் பதிலடி கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு விருந்தினராக உள்ளே வந்த அபிராமி, பழைய லாஸ்லியாவை தான் பார்க்க முடியவில்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பட்டம் வெல்லும் வாய்ப்பை தான் இழந்த நிலையில் லாஸ்லியா பட்டம் வெல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், எனவே கேமில் மட்டும் கவனம் செலுத்தி பட்டத்தை வெல்லும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் லாஸ்லியாவுக்கு அபிராமி அறிவுரை கூறியுள்ளார். இந்த அறிவுரையை அடுத்து லாஸ்லியா கேமில் முழு கவனத்தையும் செலுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்