’’பிரமாண்ட படம் வெளியானால் தியேட்டர்களைக் கொளுத்துவோம்’’- பாஜக எம்.பி மிரட்டல்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (15:20 IST)

ஆர்.ஆர்.ஆர். படம் வெளியானால் படம் வெளியாகும் திரையரங்குகளைக் கொளுத்துவோம் என தெலுங்கானா மாநில பாஜக தலைவர்  பந்தி சஞ்சய் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில்  ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரண் அல்லூரி சீதராம ராஜூவாக நடித்துள்ள கதாப்பாத்திர ப்ரமோ வெளியானது.

 

இதையடுத்து, ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள கதாபாத்திரப் ப்ரோமோ வெளியானது. இதில் ஜூனியர் என்.டி,.ஆர் , கொமரம் பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

கொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க முயற்சி செய்துள்ளதாக ராஜமௌலி மீது விமர்சனம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பழங்குடியின மக்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

கொமரம் பீம் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டுமெனவும் குரல் கொடுத்துவருகின்றனர்.

தெலுங்கானா மாநில பாஜக தலைவர்  பந்தி சஞ்சய் குமார்  ஒரு கூட்டத்தில் பேசும்போது கொமரம் பீம் தலையில் குல்லா அணிவித்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? கொமரம் பீம்-ஐ குறைவாக மதிப்பிட்டாலோ அல்லது பழங்குடியினரின் உணர்வுகளை மதிக்காமல் படத்தை எடுத்தால்

ஆர்.ஆர்.ஆர். படம் வெளியானால் படம் வெளியாகும் திரையரங்குகளைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என தெலுங்கானா மாநில பாஜக தலைவர்  பந்தி சஞ்சய் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்